Skip to main content

கமல்ஹாசன் இறுதியாக நடிக்கப்போகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

கமல் ஹாசன் 

கமல் நடிப்பில் ஏராளமான படங்கள் இருந்தாலும் கமல் நடிப்பில் 1996 ல்  வெளியான "இந்தியன்"திரைப்படம் மக்கள் மனதில் என்றுமே நிலைத்திருக்கும். இந்த படத்தை ஷங்கர் இயக்கினார், இது இந்தியா அளவில் பெரும் பெயரை தமிழ் சினிமாவுக்கு பெற்று தந்தது 


சேனாபதி @ இந்தியன் 


கமல் இந்தியன் படத்தில் நடித்தார் என்பதை விட சேனாபதி என்பவராகவே வாழ்ந்தார் என்பதே உண்மை. அப்படி ஒரு அபார நடிப்பு, இந்த கதாபாத்திரத்தை இவரை விட யாராலும் இதை நேர்த்தியாக செய்து விடமுடியாது என்பதே உண்மை 


உண்மையில் சேனாபதி போன்ற ஒருவர் நமக்கு கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று "இந்தியன்" படத்தை பார்த்துவிட்டு ஏங்கியவர்கள் ஏராளம், மீண்டும் ஒரு முறை அவரை திரையிலாவது பார்த்து விடமாட்டோமோ என்று ஆசைப்பட்டவர்களுக்கு------ "இந்தியன் 2 " இந்த வருடம் இறுதியில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தியன் 2

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய ஷங்கரே இயக்கிறார். இதில் கமல் வயதான தோற்றத்திலும் இளமையான தோற்றத்திலும் வருகிறார் 
வெளிநாட்டிலிருந்து மேக்கப் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு நேர்த்தியாக கமல் தோற்றத்தை மாற்றி இருக்கின்றனர் 
இந்த படத்தில் கமல் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார், இவர் இளம்வயது கமலுக்கு ஜோடியாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 


தைவான்

இந்தியன் முதல் பாகத்தில் இறுதி காட்சிகளில் இந்தியன் @ சேனாபதி வெளிநாட்டில் இருப்பது போல் அமைந்திருக்கும். அதனால் படம் வெளிநாட்டில் இருந்து தொடங்குவது போல் கட்சி அமைக்க படுகிறது. இதனால் படக்குழுவினர் தைவானில் படப்பிடிப்பு நடத்த இடம் பார்த்து வருகிறார்கள் . இந்த காட்சிகளில் தென் கொரியா நடிகை பே சூசியிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர் 

வில்லன் 

இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க  அக்ஷய் குமார் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இவர் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
நேற்று சென்னையில் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்கியது. கமல் ஹாசன் வயதான தோற்றத்தில் மேக்கப் போட்டு நடித்தார், கஜோல் அகர்வாலும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த படப்பிடிப்பு தொடர்ந்து முன்று மாதங்கள் நடைபெறும் 

கமல் நடிப்பில் இறுதி படம் 


இந்தியன் 2 படம் தான் கமல் நடிப்பில் வெளியாக போகும் இறுதி படம். இதை கமல் சில மாதங்களுக்கு முன்பு கூறினார். கமல் கடந்த வருடம் அன்று கட்சி தொடங்கியதில் இருந்தே பொது சேவைகளில் அதிக கவனம் செலுத்திவருகிறார் இதனால் சினிமாவில் நடிப்பதை மட்டும் நிறுத்தி உள்ளார். இவரின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் தொடர்ந்து படம் தயரிக்கும் என்று கூறிஉள்ளார் 


மக்கள் நீதி மய்யம் 

இவரின் கட்சி கொள்கைகள் மக்களின் வளர்ச்சி, படிப்பு, விவசாயம், மாணவர்களின் வளர்ச்சி என்று ஏராளமாக இருந்தாலும். கமல் இந்தியன் படத்தில் வரும் அந்த இந்தியன் @ சேனாபதி போலவே "ஊழலை ஒழிப்பதை" தன் முதல் வேலை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  


Comments

Popular posts from this blog

சர்கார் டீசர் - சொல்வதும் மறைப்பதும் என்ன?

சாமி !!!  கோடி  பார்வையாளர்களை தாண்டி பாய்ந்து கொண்டிருக்கிறது சர்கார் டீசர்.  சரி , டீசர் சொல்வதும் மறைப்பதும் என்ன?   கதையின் சாரம் புரியும்படி டீசரை அமைத்திருப்பது இப்படத்தில் கதை கருவையும் தாண்டி படத்தில் முருகதாஸ் ஸ்டைலில் பல stratergical கண்டன்ட் இருக்கும் என்பது தெரிகிறது. லாஸ் வேகாஸில் உள்ள "Paris las vegas" ஹோட்டல் பின்புலத்தில் ஆரம்பிக்கிறது டீசர் ஆரம்பத்தில் கார்பரேட் ஜாம்பவானாக வர்ணிக்கப்படும் விஜய், தேர்தலில் வாக்களிப்புக்காக இந்தியா வருவதாக கூறுகிறார். அதன் பின்வரும் காட்சிகளில் அவரின் ஓட்டை வேறு ஒருவர் போட்டிருப்பது தெரிகிறது. இதனால் விஜய் அரசியல் களத்திற்க்குள் வருகிறார். மேலும் ராதாரவி, வரலட்சுமி அவரது எதிரிகளாக காட்டப்படுகிறார்கள். பின்வரும் காட்சிகளில் மேடை ஒன்றில் விஜய் பேசி விட்டு வருகிறார் என்பது தெரிகிறது . வேறு காட்சியில் கலவரம் ஒன்றில் அவர் இருப்பது தெரிகிறது. ஆனால் இவ்விறு காட்சிகளும் ஒரே இடத்தில் நடப்பது அவற்றின் பின்புலத்தை உற்று கவனித்தால் தெரியும். மேலும் விஐய் ரசிகர்களை திருப்தி படுத்தும் வக

பிக் பாஸ் ஓவியா நடிப்பில் 90 ML - படத்தின் ட்ரைலர் வெளியானது

பிக் பாஸ்  2017 பிக் பாஸ் போட்டிக்கு  பிறகு நடிகை ஓவியா பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு பிரபலமாகி விட்டார் ஓவிய. ஒரு முறை கட்சி தலைவர் ஒருவர் ஓவியாவுக்கு போட்ட ஒரு கோடி வோட்டுகளை  எனக்கு போட்டிருந்தாள்  நான் சி.எம்  ஆகிருப்பேன் என்று சொல்லும் அளவுக்கு ஓவியா மார்க்கெட் எகிறியது. ஓவியா படம்  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா  அதிக படங்களில் நடிப்பார் என்று நம்பிக்கொண்டிருந்த "ஓவியா  ஆர்மி" பெரிய அதிர்ச்சி படமே வரவில்லை. தற்போது இவர் நடிப்பில் வெகுநாட்களாக வெளியாகாமல் இருந்த படம்  90 ml . இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது  90 ML ட்ரைலர் 

ரஜினி பண்ணை வீட்டுக்கு செல்வதற்கு இ-பாஸ் எடுத்தார் - மருத்துவ காரணங்கள்

   ட்ரெண்டிங்கில் டாப்  கடந்த மூன்று நாட்களாக சமூகவலையத்தளங்களில் அதிகம் பேசப்பட்டது ரஜினியின் பெயர் தான். LAMBORGHINI காரில் ரஜினி செல்வது போன்ற போட்டோ நேற்று முன்தினம் வெளியான போட்டோ ட்விட்டரில் ட்ரெண்டானது  கந்தனுக்கு அரோகரா  நேற்று காலை ரஜினி அவரின் ட்விட்டர் பக்கத்தில் செய்த பதிவு உலகம் முழுவதும் ட்ரெண்ட் அடித்தது. அதில் கருப்பர் கூட்டம் YOUTUBE  சேனல் நடத்துபவர்களை கடுமையாக கண்டித்தார் மற்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார் இதில் கந்தனுக்கு அரோகரா என்ற ஹாஷ்டேகையும் சேர்த்து பதிவிட்டிருந்தார் இதை அனைவரும் ட்விட்டர் மட்டுமில்லாமல் அனைத்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்தது. இ- பாஸ்  #JUSTIN | சென்னையில் இருந்து கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு இன்று செல்வதற்கு இ-பாஸ் எடுத்தார் ரஜினிகாந்த் * மருத்துவ காரணங்களுக்காக செல்வதாக இ-பாஸில் குறிப்பிடப்பட்டுள்ளது #EPass | #Rajinikanth — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) July 23, 2020 இன்று மதியம் ரஜினி குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அவர் தனது