பத்ம ஸ்ரீ
பாரத் ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷன் விருதுகளுக்கு பிறகு, இந்தியாவின் நாலாவது பெரிய விருதாக கருதப்படுகிறது "பத்ம ஸ்ரீ". இந்த பத்ம ஸ்ரீ பட்டம் ஒவொரு ஆண்டும் குடிஅரசு தினத்தன்று கலை, படிப்பு, தொழில், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், பொது சேவை மற்றும் சில துறைகளில் சாதித்தவர்களுக்காக கொடுக்கப்படும் விருதாகும்
இது 1954ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது. இது மட்டுமின்றி இந்த விருதை இந்தியாவிற்காக சேவை செய்த சில வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கும் கொடுக்க பட்டுள்ளது
பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே ?
அதீத திறமை படைத்த கலைஞர்களை விடுத்து ஒரு சில நபர்களின் சுயலாபத்திற்காக செயல் படும் "விருதை தேர்ந்த எடுக்கும் குழு" மீது புகார் எழுந்ததை அடுத்து,
இந்தியா அரசாங்கம் விருதிற்கு தகுதியானவரை தேர்ந்தெடுப்பதற்கு என்றே ஒரு தனி இணையதளத்தை தொடங்கியது. இதில் அனைத்து இந்தியா பிரஜைகளும் யாருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கலாம் என்று விண்ணப்பிக்கலாம்.
பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்களுக்கு கமல் வாழ்த்து
கமல் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்களை வாழ்த்தி பதிவு செய்திருந்தார்
தமிழகத்தில் இருந்து பத்மஸ்ரீ விருது பெற்ற மதுரை சின்னபுள்ள, டாக்டர்.R.V.ரமணி, டிரம்ஸ் சிவமணி, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், டாக்டர். ராமசாமி வெங்கடசாமி மற்றும் பங்காரு அடிகளார் ஆகியோருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.— Kamal Haasan (@ikamalhaasan) January 26, 2019
1990ல் பத்ம ஸ்ரீ விருதும் 2014ல் பத்ம பூஷன் விருதும் கமல் ஹாசன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment