கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பிரபலமான இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு இந்தியா முழுவதிலும் ரசிகர்கள் உண்டு. கீர்த்தி சுரேஷ் கடந்த வருடங்களில் தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார் இதற்கு மிக முக்கியமான கரணம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகமாக இருப்பதுதான்
சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்ற பொழுது இவரை பார்க்க வந்த கூட்டத்தை பார்த்து மற்ற தமிழ் நடிகைகளுக்கு கொஞ்சம் பிபி எகிறியிருக்கும் ஏனென்றால் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகைக்கும் இந்த அளவிற்கு கூட்டம் கூடியது இல்லை
தமிழ் படங்கள்
கடந்த வருடம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் மட்டும் 6 படங்கள் வெளியாகி உள்ளது
- தானா சேர்ந்த கூட்டம்
- நடிகையர் திலகம்
- சாமி ஸ்கொயர்
- சண்டக்கோழி 2
- சர்க்கார்
புதிய படம்
தற்போது கீர்த்தி சுரேஷ் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் இது ஒரு மலையாள படம். அந்த படத்தின் பெயர் மரக்கார் : அரபிக்கடலிண்டே சிம்ஹம். இந்த படத்தில் மோகன்லால், அர்ஜுன் மற்றும் பிரபு எனப் பலர் நடிக்கின்றனர். கீர்த்தி சுரேஷ் மூன்று வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் நடிக்கிறார் என்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது . இது ஒரு வரலாறு படமாக இருக்கும் என்ற செய்தி வெளியாகியுள்ளது
இது போக கீர்த்தி சுரேஷ் ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கப்போகிறார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது
இந்த படம் ஹீரோயின்னுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கும் என்று செய்தி வெளியாகியுள்ளது
ஈஸ்ட் கோஸ்ட் புரோடக்ஷன் சார்பில் மகேஷ் எஸ் இந்த படத்தை தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை அறிமுக இயக்குனர் நரேந்திரநாத் இயக்குகிறார் . இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கின்றனர்
Comments
Post a Comment