Skip to main content

தல VS தலைவர் -பேட்ட மற்றும் விஸ்வாசம் முதல் நாள் வசூல் நிலவரம்

பொங்கல் 





பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் நேற்று வெளியாகின. ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட மற்றும் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம்  தான் நேற்று தமிழகம் முழுவதும் பரபரப்பான செய்தியாக பேசப்பட்டது 

ரஜினி 





ரஜினி படங்கள் என்றுமே  வசூலை வாரி குவிப்பதை தவறியது இல்லை. ஆனால் பேட்ட படம் ரிலீஸ்க்கு முன்பு  தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது என்று பேசப்பட்டது இதற்கு கரணம் இளம் தலைமுறை ரசிகர்கள் அஜித் படத்தை பார்க்க விரும்புவார்கள் அதனால் பேட்ட படத்தின் வசூல் பாதிக்கும் என்றார்கள் கோடம்பாக்கத்தின் வசூல் நிபுணர்கள்



அது மட்டும் இன்றி ரஜினிகாந்தின் முந்தைய படங்களான "கபாலி" & "காலா" படங்கள் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினி ரசிகர்களையே சோதனைக்குள்ளாக்கியது, கடைசியாக வெளியான 2.0 படம் தான் ரஜினி ரசிகர்களுக்கு தெம்பு கொடுத்தது 

அஜித்

 


அஜித் படங்களும் வசூல் குவிப்பதில் தவறியது இல்லை என்றாலும் ஒரு சீனியர் அதுவும் தமிழ் திரை உலகின் சூப்பர்ஸ்டார் படத்துடன் மோதுவது கண்ணை மூடிக்கொண்டு நடுரோட்டில் நிர்ப்பதற்கு சமம் என்றும் சூப்பர்ஸ்டார் படத்துடன் மோதினால் அவ்ளோதான் என்றெல்லாம் சினிமா பிரியர்கள் தங்களுக்கு தோன்றியதை படம் ரிலீஸ் ஆவதற்கு சில நாட்களுக்கு முன்பே கூறினார்கள் 



இது மட்டும் இன்றி அஜித்துக்கு என்னதான் ஆச்சி..., ஊர்ல வேற டைரக்டர் இல்லையா  விஸ்வாசம் டைரக்டர் சிவா - அஜித் காம்பினேஷன்ல வர நாலாவது படம், தொடர்ந்து ஒரே இயக்குநரோட நாலாவது படத்தை ரசிகர்கள் பிடித்து பார்ப்பார்களா என்பது சந்தேகம் தான் என்று சில அஜித் ரசிகர்களே கூறினார்கள் 

பேட்ட VS விஸ்வாசம் 

இரண்டு மிக பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானது தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பாக ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே பெரும் மோதலையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நடிகர்கள் மோதுவது என்பது சாதாரணமாக ஒன்றாக இருந்தாலும் இந்த முறை கொஞ்சம் வித்யாசம் தான் ஏன்னென்றால் ஒரு சூப்பர்ஸ்டார் படமும் இந்த தலைமுறையின் தலையாக இருக்கும் அஜித்தின் படமும் மோதி கொண்டதால் இது பெரிதாக பார்க்கப்பட்டது .இன்று காலை முதல் வசூல் நிலவரகங்கள் வெளியாகி கொண்டிருந்தாலும் அதிகார பூர்வ அறிவுப்புக்காக காத்திருந்தோம் தற்போது அது வெளியாகியுள்ளது.



சுமார் 1000 திரை அரங்குகளுக்கு மேல் இரு திரை படங்களும் உலகம் முழுவதும் வெளியாகின இதன் முதல் நாள் வசூலில் உலகளவில் "பேட்ட" திரைப்படம் முன்னிலை வகித்துவருகிறது 
சென்னையை பொறுத்தவரை பேட்ட படம் ரூ: 1.12 கொடியும், விஸ்வாசம் படம் ரூ:88 லட்சமும் வசூல் செய்துள்ளது 
சென்னையை பொறுத்தவரை பேட்ட படம் முன்னிலையில் இருந்தாலும் தமிழகம் முழுவதும் வசூலில் "விஸ்வாசம்" அதிக வசூல் செய்துள்ளது 
விஸ்வாசம் - ரூ:26.7 கொடியும் 
பேட்ட - ரூ: 22 கொடியும் வசூல் செய்துள்ளது 


ஒட்டுமொத்தமாக இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பார்க்கும் பொழுது "பேட்ட" படம் வசூலில் விஸ்வாசம் படத்தை பின்னுக்கு தள்ளியது 
 ரசிகர் மன்றங்களை கலைத்த பிறகும் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்து கொண்டிருக்கும் "அஜித்தை" ஒரு ஆச்சிரியமாக தான் பார்க்கிறார்கள் சினிமா வட்டாரங்களை சேர்ந்தவர்கள்  

Comments

Popular posts from this blog

பிக் பாஸ் ஓவியா நடிப்பில் 90 ML - படத்தின் ட்ரைலர் வெளியானது

பிக் பாஸ்  2017 பிக் பாஸ் போட்டிக்கு  பிறகு நடிகை ஓவியா பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு பிரபலமாகி விட்டார் ஓவிய. ஒரு முறை கட்சி தலைவர் ஒருவர் ஓவியாவுக்கு போட்ட ஒரு கோடி வோட்டுகளை  எனக்கு போட்டிருந்தாள்  நான் சி.எம்  ஆகிருப்பேன் என்று சொல்லும் அளவுக்கு ஓவியா மார்க்கெட் எகிறியது.
ஓவியா படம்  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா  அதிக படங்களில் நடிப்பார் என்று நம்பிக்கொண்டிருந்த "ஓவியா  ஆர்மி" பெரிய அதிர்ச்சி படமே வரவில்லை. தற்போது இவர் நடிப்பில் வெகுநாட்களாக வெளியாகாமல் இருந்த படம்  90 ml. இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது 

90 ML ட்ரைலர் 

சர்கார் டீசர் - சொல்வதும் மறைப்பதும் என்ன?

சாமி !!!  கோடி  பார்வையாளர்களை தாண்டி பாய்ந்து கொண்டிருக்கிறது சர்கார் டீசர். 


சரி , டீசர் சொல்வதும் மறைப்பதும் என்ன?   கதையின் சாரம் புரியும்படி டீசரை அமைத்திருப்பது இப்படத்தில் கதை கருவையும் தாண்டி படத்தில் முருகதாஸ் ஸ்டைலில் பல stratergical கண்டன்ட் இருக்கும் என்பது தெரிகிறது.

லாஸ் வேகாஸில் உள்ள "Paris las vegas" ஹோட்டல் பின்புலத்தில் ஆரம்பிக்கிறது டீசர் ஆரம்பத்தில் கார்பரேட் ஜாம்பவானாக வர்ணிக்கப்படும் விஜய், தேர்தலில் வாக்களிப்புக்காக இந்தியா வருவதாக கூறுகிறார். அதன் பின்வரும் காட்சிகளில் அவரின் ஓட்டை வேறு ஒருவர் போட்டிருப்பது தெரிகிறது. இதனால் விஜய் அரசியல் களத்திற்க்குள் வருகிறார்.

மேலும் ராதாரவி, வரலட்சுமி அவரது எதிரிகளாக காட்டப்படுகிறார்கள். பின்வரும் காட்சிகளில் மேடை ஒன்றில் விஜய் பேசி விட்டு வருகிறார் என்பது தெரிகிறது . வேறு காட்சியில் கலவரம் ஒன்றில் அவர் இருப்பது தெரிகிறது. ஆனால் இவ்விறு காட்சிகளும் ஒரே இடத்தில் நடப்பது அவற்றின் பின்புலத்தை உற்று கவனித்தால் தெரியும்.


மேலும் விஐய் ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் ஆக்க்ஷன் காட்சிகள் சில இடம் பெற்றுள்ளன.


விஐய் …