ரஜினி அரசியல் அறிவிப்பு
கடந்த 2017 ஆம் ஆண்டு ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்ற செய்தி வெளியானது
முதல் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது அது இன்று வரை
இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு ரஜினி தனக்கு முதலமைச்சர் பதவி மேல் ஆசை இல்லை என்றும்
நான் கட்சி ஆரம்பித்து ஒரு இளைஞரை தான் முதல் அமைச்சர் பதவியில் அமர்த்துவேன்
என்று கூறினார்.
இது ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும். ரஜினி கூறிய இந்த யோசனை
தமிழகத்துக்கும் அடுத்த தலைமுறையின் மாற்றத்துக்காக தான் என்று அவர் கூறியதை
ஆதரித்தனர். இருப்பினும் சில ரசிகர்கள் அவர் தான் முதல் அமைச்சர் ஆக வேண்டும்
என்று ஆசைப்படுகின்றனர்
தற்போது ரஜினி ரசிகர்கள் எதிர்பார்ப்பது ஒன்று தான் எப்போது ரஜினி அரசியல்
கட்சி தொடங்குவர் என்பதுதான்.
பிரபல பத்திரிகையின் ஆசிரியர் கருத்து
துக்லக் ஆசிரியர் குருமூர்த்தி வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அளித்த பதில்
அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது அதுமட்டுமில்லாமல் ரஜினி ரசிகர்களை
உற்சாக படுத்தும் விதமாகவும் இருந்துள்ளது.
வாசகர் ஒருவர் துக்லக் கேள்வி பதில் பிரிவுக்கு எழுதியதாவது - ரஜினி
மறுசிந்தனை செய்யவேண்டும் என்று நீங்கள் கூறுவது எதை காட்டுகிறது என்று கேள்வி
கேட்டுள்ளார்
இதற்கு பதில் அளித்துள்ள குருமூர்த்தி தமிழ்நாடு உருப்பட வாய்ப்பிருக்கிறது
என்பதை காட்டுகிறது என்று எழுதியுள்ளார்.
இது தற்போது அரசியல் வட்டத்தில் புயலை கிளப்பியுள்ளது
Comments
Post a Comment