பொங்கல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் நேற்று வெளியாகின. ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட மற்றும் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் தான் நேற்று தமிழகம் முழுவதும் பரபரப்பான செய்தியாக பேசப்பட்டது ரஜினி ரஜினி படங்கள் என்றுமே வசூலை வாரி குவிப்பதை தவறியது இல்லை. ஆனால் பேட்ட படம் ரிலீஸ்க்கு முன்பு தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது என்று பேசப்பட்டது இதற்கு கரணம் இளம் தலைமுறை ரசிகர்கள் அஜித் படத்தை பார்க்க விரும்புவார்கள் அதனால் பேட்ட படத்தின் வசூல் பாதிக்கும் என்றார்கள் கோடம்பாக்கத்தின் வசூல் நிபுணர்கள் அது மட்டும் இன்றி ரஜினிகாந்தின் முந்தைய படங்களான "கபாலி" & "காலா" படங்கள் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினி ரசிகர்களையே சோதனைக்குள்ளாக்கியது, கடைசியாக வெளியான 2.0 படம் தான் ரஜினி ரசிகர்களுக்கு தெம்பு கொடுத்தது அஜித் அஜித் படங்களும் வசூல் குவிப்பதில் தவறியது இல்லை என்றாலும் ஒரு சீனியர் அதுவும் தமிழ் திரை உலகின் சூப்பர்ஸ்டார் படத்துடன் மோதுவது கண்ணை மூடிக்கொண்டு நடுரோட்டில் நிர்ப்