வாங்கக் கடல் வாங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது சென்னை வானிலை மையம் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது - தென்கிழக்கு வாங்கக் கடல் மற்றும் இந்தியா பெருங்கடலில் நிலநடுக்கோட்டு பகுதியில் வெளிமண்டல மேலடுக்கு சுழற்சியுடன் இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேலும் தீவிரம் அடைந்து மேலடுக்கு சுழற்சியுடன் இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலையின் தாக்கத்தினால் அடுத்த 24 மணிநேரத்தில் இது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது.