கற்றுக்கொள்ளவேண்டும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தோடு மோதி பார்த்த ஒருவரை எப்படி அணுகவேண்டும் என்று இன்னும் தெளிவாக கற்றுக்கொள்ளவேண்டும் தமிழக பிஜேபி கட்சியினர். "தல" எத்தனை தலைகள் வந்தாலும் தமிழ்நாட்டில் "தல" என்று சொன்னால் சட்டென எல்லோர் நினைவிருக்கும் வருவது அஜித் தான். இத்தனை வருட தமிழ் சினிமா வாழ்க்கையில் பக்குவப்பட்ட சில மனிதர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த எண்ணிக்கையில் முதலில் இருப்பது "தல" தான். தனக்கென தனி ரூட் எடுத்து தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார் "தல" தமிழ் சினிமா வரலாறில் தனக்கென ஒரு தனி மாநிலமே உருவாகும் வகையில் கோடிக்கணக்கான ரசிகர்களின் எண்ணிக்கை கொண்ட "தல". இதுவரை அதை எந்த ஒரு சுயநலத்திற்கும் பயன்படுத்தியதில்லை. அப்படி ஒரு அந்தஸ்து அவருக்கு இருந்தும் ஏப்ரல் 2011ல் தமிழ் சினிமா வரலாறில் யாரும் செய்யாத ஒரு விஷியத்தை செய்தார் "தல". தன் ரசிகர் மன்றத்தை கலைத்தது தான் விஷயம். பிஜேபி நேற்று திருப்பூரில் நடந்த பிஜேபி கட்சி ஆள் சேர்ப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கட்